தேவையான பொருட்கள்.:
கீழாநெல்லி கீரை- ஒரு கைப்பிடி அளவு, பாசிப்பருப்பு – 100 கிராம்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை.:
கீழாநெல்லி கீரையை நீரில் நன்கு அலசி, இலைகளை உருவிக் கொள்ளவும்.
இதனை பாசிப்பருப்புடன் சேர்த்து வேக வைக்கவும். மண்சட்டி அல்லது அடி கனமான வாணலியில் சிறிது நெய் விட்டு உருக்கியதும், வேக வைத்த கீரை, உப்பு, சீரகம் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.
கீழாநெல்லி கீரை உடலுக்குக் குளிர்ச்சி தரும். மஞ்சள்காமாலை நோயி னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நிவாரணம் அளிக்கும்.