செரிமானப் பிரச்சனையைப் போக்கும் இயற்கைவழி மருத்துவம்

0
68

நன்றாகப் பசித்த பின் ரசித்து,ருசித்துப் சாப்பிடுபவருக்குத் தான் ஆரோக்கியமான உடல் கிடைக்கும். நீங்கள் உணவில் முற்பாதி பருப்புப் பொடி, மிளகு ஜீரகப் பொடி, ஜங்காயப் பொடி ஆகியவற்றில் ஒன்றைச் சூடான சாதத்தில் சிறிது நல்லெண்ணெயுடன் கலந்து சாப்பிடவும். இது எளிதில் ஜீரணமாகக் கூடியது. வயிற்றில் கன உணர்வையும் ஏற்படுத்தாது.

அதன் பிறகு, ஜீரக ரசம் சூடான சாதத்தில் கலந்து உண்ணவும். முற்றிய மாங்கொட்டையினுள் உள்ள மாம்பருப்பை உலர்த்தி வைத்துக் கொண்டு அத்துடன் கறிவேப்பிலையும் சிறிது மிளகும் சேர்த்து அரைத்து மோரில் கரைத்தச் சூடாக்கித் தாளித்து சிறிது உப்புச் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும். மாந்தளிரையும் மாம்பருப்பின் இடத்தில் உபயோகிக்கலாம்.

அடிக்கடி மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் தொந்தரவு நீங்கி நல்ல ருசியும் பசியும் ஏற்படுத்தும் உணவு முறை இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here