வேர்க்கடலைக் காரப்பொடி

0
111

வேர்க்கடலைக் காரப்பொடி

தேவை:

காய்ந்த மிளகாய் – 10,

லேசாக வறுத்த வேர்க்கடலை – ஒரு கப்,

கசகசா – ஒரு டீஸ்பூன்,

பெருங்காயம் – அரை டீஸ்பூன்,

எள் – ஒரு டேபிள்ஸ்பூன்,

உளுத்தம்பருப்பு – கால் கப்,

பொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்,

உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் அதில் காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை சேர்த்து வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

மற்றொரு வெறும் வாணலியைச் சூடாக்கி அதில் எள், கசகசாவை வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

வறுத்த பொருள்கள் அனைத்தும் ஆறியதும் அவற்றுடன் பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து அரைத்தெடுத்தால் சுவையான வேர்க்கடலைப் பொடி தயார்.

இதைச் சூடான சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம் அல்லது தோசை, இட்லிக்குப் பொடியாகத் தொட்டும் சாப்பிடலாம்.

g

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here