மணியடிப்பதிலும் ஒரு மந்திரமா?

0
142

கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம், தூப தீபம், நைவேத்யம், கற்பூர ஆரத்தி காட்டும் போதும், வீட்டில் பூஜையிலும் மணியடிப்பது அவசியம். அப்போது,

“ஆகமார்த்தம் து தேவானாம்
கமனார்த்தம் து ரக்ஷஸாம்
குர்வே கண்டா ரவம் தத்ர
தேவதா ஆஹ்வான லாஞ்சனம்”

என்னும் மந்திரத்தை சொல்லி மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்க வேண்டும்.

சமஸ்கிருதம் தெரியாதவர்கள்,

“தேவர்களை வரவேற்பதற்காகவும், பூஜை செய்யுமிடத்தில் இருக்கும் கண்களுக்குப் புலப்படாத தீய அல்லது அசுர சக்திகளை விலக்குவதற்காகவும் இந்த மணியோசையை எழுப்புகிறேன்,” என்று சொல்ல வேண்டும்.

பெருமாளுக்குரிய மணியின் உச்சியில் கருடாழ்வாரும், சிவனுக்குரிய மணியில்
நந்தியும் இடம் பெற்றிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here