5 சகோதரர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு மனைவி !! ஒரே வீட்ல …

0
100

.

உலகம் முழுவதும் பல்வேறு விதமான வித்தியாசமான கலாச்சாரங்கள் உள்ளன.மேலும் சொல்லப்போனால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதமான பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் உள்ளன.ஆனால் நீங்கள் வியந்துபோகும் அளவுக்கு ஒரு பழக்கவழக்கம் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மலைகிராமத்தில் அற்புதமான இதுவரை கேள்விபடாத விசித்திர நடைமுறை ஒன்று பழக்கத்தில் உள்ளது . அது என்னவென்றால், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் அனைவரையும் அதாவது சகோதரர்கள் அனைவரையும், ஒரே ஒரு பெண் மணப்பது .

அதாவது ஒரு பெண்ணிற்கு, சகோதரர்கள் அனைவரும் கணவராகி விடுவர். உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் அருகே உள்ள கிராமம் விராட்கை. பாண்டவர்களின் பதிமூன்று ஆண்டு வனவாசத்திற்கு தங்க உதவிசெய்த விராட் ராஜாவின் பெயரால் தான் இந்த கிராமம் அழைக்கப்பட்டு வருகிறது. மகா பாரதத்தில்தான்,பாஞ்சாலிக்கு தான் ஐந்து பஞ்ச பாண்டவர்களும் கணவராக இருப்பார்கள்.

ஆனால் இந்த கிராமத்தில், நிறைய பெண்கள் பாஞ்சாலியாக தான் உள்ளனர். உலகம் முழுவதும் வேறு வேறு கலாச்சாரத்தை பின்பற்றினாலும், புதுமைகளை வாய் பிளந்து பார்த்து வந்தாலும், ஒரு பெண் குடும்பத்தில் உள்ள அனைத்து சகோதரர்களையும் கணவராக ஏற்றுகொள்வது, நம்மால் ஏற்றுக்கொள்வதற்கு சற்று கடினம் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here