#கந்தர் சஷ்டி விரதம் #ஸ்பெஷல் ! சூர சம்ஹாரம் … !!!

0
21

அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி

எனைத்தடுத் தாட்கொள என்றென துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி

கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம் … !!!

முருகப்பெருமான் அசுரர்களான சூரபத்மன் முதலானவர்களை வதம் செய்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விரத விழாவாகக் கொண்டாடுகின்றோம். சூரபத்மன்; ஒருபாதி “நான்” என்கின்ற அகங்காரமும், மற்றொருபாதி “எனது” என்கின்ற மமகாரமாகவும் அமையப் பெற்றவன்.

சூரபத்மன் ஆணவ மலம் கொண்டவன். தாரகாசுரன் மாயா மலம் உடையவன். சிங்கமுகன் கன்ம மலத்தின் வடிவம். இவர்களை ஞானம் என்கின்ற முருகனது வேல் வெல்கிறது.

அதாவது நம்மைப் பிடித்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களில் இருந்து வீடுபேறடைய ஞானம் என்ற இறை சக்தியால் மட்டுமே முடியும் என்பதைதே சூரசம்ஹாரம் நிகழ்வு நமக்கு அறிவுறுத்துகின்றது.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
வீரவேல் முருகனுக்கு அரோகரா!
திரு செந்தில் நாதனுக்கு அரோகரா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here