நீங்கள் கடவுளை வணங்குவீர்களா ? அப்படினா இதை நிச்சயமா செய்யனும்

0
64

உலகத்தில் கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள் பலர் , கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் சிலர். ஆன்மிகம் என்பது ஆன்மாவுடன் தொடர்புடைய விஷயங்களைக் குறிக்கும்.

ஆன்மிகத்தில் ஈடுபடும் போது ஆண்களும் , பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் சிலவற்றை காண்போம்.

தற்போது பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன என்பதை பார்ப்போம் ;

கோவில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது. கோவிலில் தெய்வத்தை வணங்கும் போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கொண்டு, முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்க வேண்டும்.

கர்ப்பமான பெண்கள் உக்கிர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக் கூடாது. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாது. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக் கூடாது.

தலைக்கு குளிக்கும்போது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும். பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும், உச்சந்தலையிலும் இட்டுக் கொள்ள வேண்டும்.

திருமணமாகாதவர்கள், உச்சந்தலையில் இட்டு கொள்ளக் கூடாது. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும். திருமணமான பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும்.

ஒரே காலில் இரண்டு மூன்று அணியக்கூடாது, அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி பாதிப்பு அடையும். தெற்கு பகுதியை பார்த்து நின்று கொண்டு கோலமிடக்கூடாது. கோவிலில் பெண்கள் அங்கபிரதட்சணம் செய்யக் கூடாது.

இப்போது ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன என்பதை பார்ப்போம் ; திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தவுடன் குளிக்கக் கூடாது. அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு உணவு உண்ணக் கூடாது.

இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு நிற்பதோ, உட்கார்ந்து கொள்வதோ கூடாது. நாம் உடுத்திய துணிகளை வீட்டிலுள்ள கதவுகளின் மீது போடக்கூடாது. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக்கூடாது.

உடம்பிலிருந்து உதிர்ந்த முடியையும், வெட்டிய நகத்தையும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது. உடனே வெளியே எறிந்து விட வேண்டும். ஷேவ் செய்து கொள்ளும் முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது. தாய், தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமையன்று ஷேவ் செய்யக் கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here