கேசரி போண்டா

0
137

தேவையானவை:

கேசர‌ி‌க்கு
ரவை – அரை கப்
சர்க்கரை – 1 கப்
பொடியாக நறுக்கிய முந்திரி – 1 தே‌க்கர‌ண்டி
ஏலக்காய்த்தூள் – அரை தே‌க்கர‌ண்டி
நெய் – 2 தே‌க்கர‌ண்டி
சிகப்பு கலர் – சிறிது
மேல் மாவுக்கு
மைதா – ஒன்றரை கப்
பால் – அரை கப்
ஆப்ப சோடா – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் கேசரி செய்து கொள்ள வேண்டும். அதற்கு, ஒரு தே‌க்கர‌ண்டி நெய்யை காயவைத்து ரவையை வாசனை வரும்வரை வறுத்தெடுங்கள்.

மீதமுள்ள நெய்யைக் காயவைத்து, முந்திரிப் பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் ஒன்றரை கப் தண்ணீரைச் சேருங்கள். அத்துடன் சிகப்பு கலரை சேருங்கள்.

நன்கு கொதிக்கும்போது ரவையை சேர்த்து, நன்கு சேர்ந்து வரும்வரை கிளறி இறக்குங்கள்.

ஆறியதும் சிறு உருண்டைகளாகப் பிடித்து வையுங்கள்.

மேல் மாவுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் மைதா மாவுடன் உப்பு, ஆப்ப சோடா, தேவையான அளவு பால், தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பாதத்துக்கு கரைத்துக் கொள்ளுங்கள்.

கேசரி உருண்டைகளை இதில் தோய்த்து எடுத்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.

வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த கேசரி போண்டா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here