கிருஷ்ண லீலை

0
60

எல்லோரும் கூட்டமாக தேவ லோகத்தை காலி செய்து எங்கே போகிறீர்கள் ? தேவேந்திரன்,

தேவர்கள் அதிபதியானவன் திகைத்து கேட்டான். தேவர்கள் பதில் சொன்னார்கள்.

பூலோகத்தில் யசோதை என்ற ஆயர் குல பெண்ணை பார்க்க போகிறோம்.

பாரத தேசத்தில் கோகுலம் பிருந்தாவனம் என்ற ஆய்ச்சியர் வாழும் இடத்தில் உள்ளாளாம் ;

உங்கள் நிலை என்ன ! கேவலம் இடக்கை வலக்கை பேதம் அறியாத, அறிவொன்றும் இல்லாத ஆயர் குல பெண்மணியை தேடி போவது விந்தை !

தேவாதி தேவா ! நாங்கள் வைகுண்டம் தான் செல்வதாக இருந்தோம்.

நித்யஸ்ரீ வேண்டி ஸ்ரீமன் நாராயணரின் பத்ம பாதங்களை சிக்கென பிடிக்கவே புறப்பட்டோம்.

ஆனால் , த்வார பாலகர்கள் உள்ளே விடவில்லை.

பகவான் இப்போது ஆயர்கள் வீட்டில் சிறு குழந்தை ஆகி , க
தாய் யசோதாவின் இரு பாதங்களை இறுகப் பற்றிய படி எண்ணை நீராட்டம் காண்கின்றார்.

அங்கு போய் பார்த்துகொள்ளுங்கள் என்று அனுப்பினர்.

அது சரி, பகவானை பார்க்கச் செல்கிறோம் என்று கூறாது அவன் தாயை பார்க்க போவதாக கூறுவானேன் ?

நாங்கள் பற்ற விரும்பியது ஸ்ரீ கேசவனின் திருப்பாதங்கள்.

ஆனால் அவனே வேறு ஒரு பெண்ணின் பாதம் பற்றுவதாக அறிந்து,

எப்பேர்பட்ட மஹாபாக்கியம் செய்தவள் அவள் என்று வியந்து அந்த
யசோதா மாதாவைத் தரிசிக்க போவதாக சொன்னோம்.

மேலும் இனி பரமபதம் வைகுண்டம் அல்ல
கோகுலமும் ப்ருந்தாவனமுமே பரமதாமம்.

இருங்கள் நானும் கூட வந்து சேவிக்கிறேன் அந்த பெண் அரசியை
என தேவேந்திரனும்
இக்கோலத்தைக் காண சடுதியில் தன் ஐராவதத்தில் கொண்டு கிளம்பி விட்டான் .

யஸ்யாங்க்ரி யுக்மம் அனுதேவவரா: ப்ரபன்னா:
கிருஷ்ணஸ்ஸ ஏவ தவ பாதயுக்மம் ப்ரபன்ன:!
கிம் வர்ணயாமி தவ பாக்யம் அஹோ யஷோதே
வைகுண்டதோபி பரம: வ்ரஜ ஏவ ஆஸ்தே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here