
தேவையான பொருட்கள்.:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – 100 கிராம்,
பச்சை ஆப்பிள், பேரிக்காய் – தலா 1, மிளகு – 6 (எண்ணிக்கையில்),
இஞ்சி – ஒரு சிறு துண்டு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை.:
பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து இஞ்சி, மிளகு, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
பச்சை ஆப்பிள், பேரிக்காயை பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்துப் பிசையவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தீயை மிதமாய் வைத்து, வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
குறிப்பு.:
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பச்சை ஆப்பிள் மிகவும் நல்லது. இதற்கு சாஸ் அல்லது சட்னி சூப்பர் சைட்-டிஷ்!