வேர்க்கடலை அடை

0
128

தேவை:

காய்ந்த மிளகாய் – 10,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
பச்சை வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்,
உடைத்த வேர்க்கடலை – ஒரு கப்,
இட்லி அரிசி – 2 கப்,
துவரம்பருப்பு – கால் கப்,
கடலைப்பருப்பு – கால் கப்,
நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – ருசிக்கேற்ப.

செய்முறை:

அரிசியைத் தண்ணீரில் இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்.

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை வேர்க்கடலையை ஒன்றாகத் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

பின்னர் அரிசி, பருப்பு வகைகளுடன் உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உடைத்த வேர்க்கடலை தாளித்து அரைத்த மாவில் கொட்டிக் கிளறவும்.

இதைத் தோசைக்கல்லில் அடையாக ஊற்றி நெய்விட்டு சுட்டெடுக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here