கடலை ஸ்டஃபிங் பரோட்டா

0
118

தேவை:

கோதுமை மாவு – அரை கப்,

கடலை மாவு – அரை கப்,

வறுத்த வேர்க்கடலைப் பொடி – 2 டேபிள்ஸ்பூன்,

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,

கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்,

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,

ஒன்றிரண்டாக உடைத்த வறுத்த வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்,

மிளகு, சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,

உலர் வெந்தய இலை – 2 டேபிள்ஸ்பூன்,

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை –

வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் தவிர மற்ற பொருள்களை சேர்த்துக் கலக்கவும்.

பின்னர் இதில் நீர் தெளித்து சப்பாத்தி மாவுப் பதத்தில் நன்கு பிசைந்து அதைச் சப்பாத்திகளாக இடவும்.

பின்னர் தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு சூடாக்கி இந்த சப்பாத்திகளை ஒவ்வொன்றாகப் போட்டு இருபுறமும் பொன்னிறமாகச் சுட்டெடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு:

தயிரில் சாட் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து இந்த பரோட்டாவுக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here