ரசப்பொடி

0
136


தேவையானவை: காய்ந்த மிளகாய் – ஒரு கப், தனியா – கால் கப், மிளகு – 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு – ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம் – சிறிதளவு, விரலி மஞ்சள் (சிறியது) – 1, எண்ணெய் – வறுக்க.

செய்முறை: காய்ந்த மிளகாயை தவிர மற்ற பொருட்களை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்துக் கொள்ளவும். மிளகாயை மட்டும் சிறிது எண்ணெய் விட்டு பக்குவமாக வறுத்து எடுக்கவும். மிஷினில் அல்லது மிக்ஸியில் மிளகாயைத் தனியாக அரைத்துக்கொள்ளவும். மற்ற பொருள்களையும் தனியாக அரைத்துக் கொள்ளவும். இரண்டு பொடிகளையும் நன்றாகக் கலந்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். ரசம் வைக்கும் பொழுது தேவையான அளவு பொடியைப் போட்டு ரசம் வைத்தால், ரசத்தின் ருசியும், மணமும் நன்றாக இருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here