அட இதை இந்த ஹோரையில் செய்யலாமா?

0
125

ஹோரைகள் சுப, அசுப என இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சந்திரன், புதன், சுக்கிரன், குரு ஆகியன சுபஹோரை; சூரியன், செவ்வாய், சனி ஆகியன அசுப ஹோரை. இவற்றுக்கென தனித்தனியாக பலாபலன்கள் சொல்லப்பட்டுள்ளன.

அதேபோன்று எந்தெந்த ஹோரைகளில் என்னென்ன செய்யலாம்; செய்யக்கூடாது என்பது குறித்த அறிவுறுத்தல்களும் உண்டு. அதன்படி செயல்பட்டால் நற்காரியங்களில் ஜெயமும்; நல்ல பலன்களும் கிடைக்கும்.

சூரியன்: உத்தியோகத்தில் சேர்தல். பத்திரங்கள் மற்றும் உயில் எழுதுதல், சிபாரிசு செய்தல் போன்றவற்றை சூரிய ஹோரையில் செய்வது சிறப்பு. அரசு தொடர்பான அதிகாரிகளை சந்திக்கலாம். வழக்கு சம்பந்தமாக பேசலாம் . தகப்பனாரின் உதவியை பெற அவரை நாடலாம்
உயில், பத்திர சாசனங்களில் கையெழுத்திடலாம்.
சிவ தரிசனம் செய்யலாம் .

சூரிய ஹோரையில் சொந்த வீட்டிலோ,வாடகை வீட்டிலோ பால் காய்ச்சகூடாது புது வீட்டில் குடியேற கூடாது..பயணத்துக்கு உகந்தது அல்ல.
தொலைந்து போன பொருளை இந்த ஹோரை சமயத்தில் தேடினால் கிடைக்காது.

++++++++++++++++++++++

சந்திரன்: யாத்திரை செல்லுதல், வெளிநாடு புறப்படுதல் ஆகியவற்றை இந்த ஹோரையில் மேற்கொள்ளலாம். புது வியாபாரம் தொடங்கலாம் . குறிப்பாக தண்ணீர் , பால்,அழுகும் பொருட்கள் வியாபாரம் விருத்தியாகும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம் . வங்கியில் கணக்கு தொடங்கலாம். பெண் பார்க்கும் நிகழ்சிகளை ஏற்பாடு செய்யலாம்.அம்மன் ஆலயம் சென்று வழிபடலாம்.கண் சமந்தமாக மருத்துவரை சந்திக்கலாம்.கண் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடக்க அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யலாம்.தாயாரின் உதவியை பெற அவரை நாடலாம்.
தேய்பிறை சந்திரன் காலங்களை தவிர்த்தல் நல்லது.
சொத்து பற்றிய விவரங்கள் பேச உகந்தது அல்ல.

வாழ்வை மாற்ற ஒரு எளிமையான வழிமுறை கான்பதற்க்கு ஸ்ரீ காலபைரவி ஜோதிட நிலையம் ஆத்தூர் ஆன்மீக ஜோதிட ஆசான் மு.கிருஷ்ண மோகன் 8526223399

++++++++++++++++++++++++
செவ்வாய்: மருத்துவமனைப் பணிகள், அறுவை சிகிச்சை, மருந்து அருந்துதல் ஆகியவற்றுக்கு உகந்த ஹோரை இது. ஆனால் செவ்வாய் ஹோரையில் சுபகாரியங்களைத் தவிர்க்கவும், பேச்சைக் குறைக்கவும் வேண்டும்.
சொத்துகள் வாங்குவது விற்பது பற்றி பேசலாம். வீடு தோட்டம் நிலத்தை போய்ப்பார்க்கலாம். சகோதரர்கள், பங்களிகளின் பிரச்சனைகளைப் பேசலாம், ரத்த தானம் செய்யலாம் . சகோதர உதவிகளை நாடலாம். முருகன் தலங்களுக்கு செல்லலாம் . கடனை அடைக்கலாம் .ஆனால் கடன் வசூல் செய்ய போகக்கூடாது.
குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் கூடாது. பெண் பார்க்கும் வைபவங்களை தவிர்க்கவேண்டும் .
தடை, தாமதம், விபத்து, ரணகாயங்கள் உண்டாக்கும் ஓரையாகும்! இது ஒரு காரசாரமான சண்டை கலகமூட்டும் கிரக ஒரையாகும்!
கவனம்…
++++++++++++++++++++++++

புதன்: வழக்கு தொடர்பாக வழக்கறிஞரை அணுகுதல், கதை- கட்டுரைகள் எழுதுதல், ஜாதகம் பார்த்தல், வங்கியில் புதுக்கணக்கு தொடங்குதல், நிலம் வாங்குதல் ஆகியவற்றுக்கு உகந்தது. கல்வி சமந்தமாக எல்லா விஷயங்களயும் செய்யலாம்.
வியாபார கணக்கு வழக்குகள் சரி பார்க்கலாம்..
மாமன் வகை உறவுகளின் உதவியை நாடலாம்.
கம்ப்யூட்டர் வாங்கலாம். கம்ப்யூட்டர் பயிற்சியில் சேரலாம்.
நல்ல விஷயங்களுக்கு தூது போகலாம்.
காணாமல் போன பொருள் தேடினால் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்
பெருமாள் தலங்களுக்கு சென்று வணங்கலாம்.
பெண்பார்க்கும் சம்பவம் கூடாது.
வீடு,நிலம்பற்றி பேச கூடாது.
சொத்துகளை பார்வையிடக்கூடாது.
வாழ்வை மாற்ற ஒரு எளிமையான வழிமுறை கான்பதற்க்கு ஸ்ரீ காலபைரவி ஜோதிட நிலையம் ஆத்தூர் ஆன்மீக ஜோதிட ஆசான் மு.கிருஷ்ண மோகன் 8526223399

+++++++++++++++++++

குரு ஹோரை
சகல சுப காரியங்களுக்கும் ஏற்ற ஹோரை.
பொன் நகைகள் வாங்கலாம்.
புது மணப் பெண்ணிற்கு மாங்கல்யம் வாங்கலாம் .
வங்கியில் பிக்சட் டெபொசிட் செய்யலாம்.
குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம்.
பெண்கள் கணவரிடம் விரும்பியதை கேட்கலாம்.
கொடுக்கல் வாங்கல் வைத்து கொள்ளலாம்.
யாகங்கள் ஹோமங்கள் செய்வதற்க்கான பொருட்களை வாங்கலாம்.
இந்த ஹோரையில் எடுத்த காரியங்கள் அனைத்தும் நன்மை பயக்கும். இந்த ஹோரை வேளையில் முகூர்த்தம் அமைவது உத்தமம். நகைக் கடை துவக்க, பெரிய தொழில்கள் ஆரம்பம் செய்ய உகந்த ஹோரை இது
ஆலய தரிசனம் மிக மிக சிறப்பு.

குரு ஹோரையில் முதல் முதலில் சந்திக்கும் ஒருவருக்கு விருந்து வைக்க கூடாது. அதே போல புது மண தம்பதிகளுக்கு விருந்து,உபசாரம் செய்யகூடாது.

+++++++++++++++++++++

சுக்கிரன்: திருமணம் சம்பந்தமான செயல்கள் தொடங்குதல், சாந்தி முகூர்த்தம், சங்கீதம் , ஆடல் , பாடல், கூடல், ஆடை- ஆபரணம் அணிதல், அழகு பொருட்கள், ஆடை வியாபாரம் தொடங்குதல், சுப நிகழ்ச்சிகள், விருந்து அளித்தல், புதிய வாகனங்கள் வாங்குதல் ஆகியவற்றுக்கு உகந்தது. பெண் பார்க்கும் சமயம் சுக்கிர ஹோரயாக இருந்தால் மிகவும் நல்லது.
.காதலை வெளிப்படுத்த அருமையான நேரம் இது.
வெள்ளி பொருட்கள் வைர ஆபரணங்கள் வாங்கலாம்.
விருந்து வைக்கலாம்
புது வாகனம் ஏறலாம். வண்டி வாங்க பணம் கட்டலாம்.
சொத்து விஷயங்களை பேசலாம்.கணவன் மனைவிஇடையே ஒருவருக்கொருவர் விஷயங்களை பகிர்ந்து பேசலாம்.
பெண்களின் உதவியை நாடலாம்.
பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேரலாம்.
மகாலஷ்மி வழிபாட்டுக்கு உகந்த நேரம்

சுக்கிர ஹோரையில் நகை / பணம் இரவல் கொடுக்க கூடாது .
குடும்ப பிரச்சனைகளை பேசக் கூடாது.
துக்கம் விசாரிக்ககூடாது.

வாழ்வை மாற்ற ஒரு எளிமையான வழிமுறை கான்பதற்க்கு ஸ்ரீ காலபைரவி ஜோதிட நிலையம் ஆத்தூர் ஆன்மீக ஜோதிட ஆசான் மு.கிருஷ்ண மோகன் 8526223399

++++++++++++++++++++++++

சனி: நிலம், வீடு- மனை வாங்க விற்க முயற்சிக்கலாம். இரும்பு சாமான்கள் வாங்குதலும் பழைய வாகனம் வாங்குதலும் செய்யலாம்.
ஆனால், இந்த ஹோரையில் பிரயாணம், மருத்துவமனை செல்லுதலை தவிர்க்க வேண்டும்.
மரக்கன்றுகள் நடலாம்.
நவகிரக பரிகார பூஜைகள் செய்யலாம்.
வாங்கிய கடனை அடைக்கலாம்.
பாத யாத்திரை, நடை பயணம் செய்ய உகந்தது.
சனி ஹோரையில் நோய்க்கு முதன் முதலாக மருந்து சாப்பிடகூடாது.
மருத்துவரை சந்திக்க கூடாது.
வெளியூர் செல்ல டிக்கெட் முன்பதிவு கூடாது.
முதல் முதலாக பிறந்த குழந்தையை போய் பார்க்க கூடாது .
துக்கம் விசாரிக்க போக கூடாது.
சனி ஓரையில் எந்த ஒரு சுப காரியத்திலும் ஈடுபட கூடாது!
மீறி செய்தால் அக்காரியத்தில் தடை, தாமதம், தோல்விகளே ஏற்படும்! முடிவு அசுபம் உண்டாக்கும்!
கண்டங்கள், விபத்துக்கள், பிடிபடுதல், தீயவிளைவுகளை வாரி வழங்குவது சனி ஓரையாகும்! பெரும்பாலான வாகன விபத்துக்கள் சனி ஓரையில்தான் நிகழும்!

சரி….இது எல்லா இடத்திலும் உள்ளதுதானே …?..என நீங்கள் கேட்பது புரிகிறது.

இதை பயன்படுத்தும் நுட்பமான விளக்கம் அடுத்த பதிவில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here