அண்மை செய்திகள்

0
125

அரியர் தேர்வுகள் ரத்தை எதிர்த்த வழக்கால் பிற வழக்குகள் விசாரணை பாதிப்பு!

ஆன் லைன் விசாரணையில் 350க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று இடையூறு.

நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆன் லைன் விசாரணையில் லாக் இன் செய்ததால் இடையூறு.

வீடுகளில் டி.வி. ஒலி, குழந்தைகள் சப்தம் உள்ளிட்ட இடையூறுகள் ஏற்பட்டதால் வழக்கு விசாரணை நிறுத்தம்.

விசாரணையை நிறுத்தி நீதிபதிகள் அதிருப்தி..

வங்க கடலில் நவம்பர் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!

தென்மேற்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும்.

அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

23ம் தேதி நாகை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, கனமழை பெய்யக்கூடும்.

ராமநாதபுரம், புதுக்கோட்டையிலும் கனமழை பெய்ய வாய்ப்பு.

24ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

டெல்லியின் காற்று மாசால் அவதிப்படும் சோனியா காந்தி: சென்னைக்கோ, கோவாவிற்கோ தற்காலிகமாக குடிபெயர்வார் என தகவல்!

டெல்லியில் காற்று மிகவும் மோசமடைந்துள்ளதால், சுவாசப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வரும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, சென்னைக்கோ, கோவாவுக்கோ தற்காலிகமாக குடிபெயரக் கூடும் என கூறப்படுகிறது.

சோனியா காந்திக்கு நீண்ட நாட்களாக நெஞ்சக தொற்று பாதிப்பு உள்ளது. டெல்லியில் நிலவும் அதிதீவிர காற்று மாசால் அது அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப் படி அவர் டெல்லியை விட்டு வெளியேற உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நோய் தீவிரம் காரணமாக கடந்த ஜூலை 30 ஆம் தேதி டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், செப்டம்பர் 12 ஆம் தேதி மேற்சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார்.