பாட்டி வைத்தியம்: மஞ்சள், வேப்பிலை, துளசி போட்டு ஆவி பிடிங்க

0
109

உலகம் முழுதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற சீன மருத்துவர்கள் பின்பற்ற சொல்வதும், இந்த ஆவி பிடிக்கும் முறையை தான். கொரோனா வைரஸ் முதலில் தாக்குவது, தொண்டையை தான். அதிலிருந்து தான் நுரையீரலை பதம் பார்க்க தொடங்கும். ஆகவே, கொரோனா வைரஸை தொண்டையிலேயே அழிக்கும் விதமாக ஆவி பிடிக்கும் முறையை பின்பற்ற தொடங்கிவிட்டனர். எனவே, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க ஆவி பிடித்தால் சாதாரண சளி தொந்தரவுகளும் நீங்கும் கொரோனா வைரஸ் தாக்கிவிடுமோ என்ற அச்சமின்றி இருக்கலாம்.

இது சமீபகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழக்கவழக்கம் கிடையாது. பழங்காலத்தில் இருந்தே தமிழர்கள் பின்பற்றி வரும் மிகச்சிறந்த மருத்துவ முறையாகும். ஒரு காலத்தில் ஒரே தும்மல், தொடர்ச்சியான இருமல், தலை வலி, தலை பாரம் என்றால் வீட்டு பெரியவர்கள், ஆவி பிடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பார்கள்.

இயற்கையான முறையில், தலைவலி, உடல் வலி, சளித் தொந்தரவு, இருமல் என எதுவாக இருந்தாலும் சரி முதலுதவியாக செய்து வருவது ஆவி பிடிப்பது தான். இது பைசா செலவழிக்காமல் நம் முன்னோர்கள் கையாண்ட கை வைத்திய முறையாகும்.

மஞ்சள் வேப்பிலை துளசி போட்டு கொதிக்க வைத்த சூடான நீர் உள்ள பாத்திரத்தின் முன்பு தலை குனிந்து உட்கார்ந்துகொண்டு, நம்மை போர்வையால் மூடிக்கொண்டு, சூடான நீர் உள்ள பாத்திரத்தின் மூடியை சிறிது சிறிதாக விலக்கி, பாத்திரத்தில் இருந்து வெளியேறும் ஆவியை நாம் ஆழமாக சுவாசிக்க வேண்டும். கூடவே, முகம், முன் நெற்றி, கழுத்துப்பகுதி,களில் ஆவி படும்படி திருப்பி திருப்பி செய்துவர வேண்டும். அதே சமயத்தில் நமது கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான், பைசா செலவு இல்லாமல் மிக எளிமையான மருத்துவ சிகிச்சை முடிந்து விட்டது.


இவ்வாறு சுமார் ஐந்து முதல் பத்து நிமிடம் வரை செய்ய வேண்டும். காலை மற்றும் இரவு வேளைகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வரவேண்டும். இப்படி, ஆவி பிடிப்பதால், தலையில் நீர் கோர்த்துக்கொண்டு தலை வலியால் அவதிப்படுபவர்களுக்கு, கெட்ட நீர் முழுவதும் வெளியேறிவிடும். சளிக்கட்டு, சளித் தொந்தரவு, தொண்டையில் சளித் தொந்தரவு உள்ளவர்கள் இதை தொடர்ந்து செய்து வந்தால் தொண்டையில் உள்ள வைரஸ் தொற்றுகள் முழுவதும் அழிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here