ப்ரஸ்ஸல்ஸ் குருமா

0
87

சமைக்க தேவையானவை
ப்ரஸ்ஸல்ஸ்சுமார் 15 பச்சைப்பட்டாணி_1/2 கைப்பிடி சின்ன வெங்காயம்_10 தக்காளி_1 இஞ்சிசிறுதுண்டு
பூண்டிதழ்3 மிளகாய்த்தூள்_3 டீஸ்பூன் மஞ்சள்தூள்சிறிது
எலுமிச்சை சாறு1/2 டீஸ்பூன் கொத்துமல்லி,புதினா உப்புதேவைக்கு
தேங்காய் பத்தை3 கசகசாஒரு டீஸ்பூன்
பொட்டுக்கடலை_ஒரு டீஸ்பூன்


உணவு செய்முறை :
Step 1.
முதலில் தபச்சைப்பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைக்கவும். வெங்காயம்,தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கவும்.இஞ்சி&பூண்டு தட்டிக்கொள்ள‌வும்.

Step 2.
ப்ரஸ்ஸல்ஸை முழுதாகக் கழுவிவிட்டு நுனிப்பகுதியில் லேஸாகக் கீறிவிடவும்.அல்லது முழுதாகக்கூட போட்டுக்கொள்ள‌லாம். அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.

Step 3.
பிறகு வெங்காயம்,தக்காளி,பட்டாணி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கிவிட்டு,இரண்டு கப் தண்ணீர் ஊற்றி,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி கொதிக்க விடவும்.

Step 4.
நன்றாகக் கொதித்த பிறகு ப்ரஸ்ஸல்ஸை சேர்த்து வேக வைக்கவும்.இது சீக்கிரமே வெந்துவிடும்.

Step 5.
அரைக்க வேண்டியவற்றை மைய அரைத்து,குருமா மீண்டும் கொதி வரும்போது அதில் சேர்த்து கலக்கிவிடவும்.

Step 6.
எல்லாம் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் எலுமிச்சை சாறு,கொத்துமல்லி இலை,புதினா சேர்த்து இறக்கவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here