பேக்ட் குயே

0
135

தேவையானவை: பாண்டன் இலை – 5, மைதா மாவு – ஒரு கப், முட்டை – ஒன்று (விரும்பாதவர்கள் கண்டன்ஸ்டு மில்க் பயன்படுத்தலாம்), சர்க்கரை – 1/2 கப், கெட்டியான தேங்காய்ப்பால் – 150 மில்லி, எண்ணெய்/நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன், பச்சை ஃபுட் கலர் – சில துளிகள் (விரும்பினால்).

செய்முறை: பாண்டன் இலையைக் கழுவி நறுக்கி, அதனுடன் முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அதில் முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். சர்க்கரை கரைந்ததும், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கி, மைதா மாவு மற்றும் உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும். விரும்பினால் பச்சை ஃபுட் கலர் சேர்க்கலாம் (பாண்டன் இலை இயற்கையாகவே பச்சை நிறம் கொடுக்கும்). பேக்கிங் தட்டில் எண்ணெய் அல்லது நெய் தடவி, அதில் கலவையைச் சேர்த்து, `அவனை’ 180 டிகிரி ப்ரீஹீட் செய்து, கலவையை ஒரு மணி நேரம் பேக் செய்து எடுக்கவும். விரும்பிய வடிவத்தில் கட் செய்யவும்.

குறிப்பு: `அவன்’ இல்லாதவர்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கலாம். இந்த குயேயில், மணமும் சுவையும் நிறைந்திருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here