உடலுக்கு வலுவூட்டும் களி வகைகள் … (Page 2)

RADIOMADURAI • www.radiomadurai.com

நமது பழந்தமிழரின் உணவில் மிக முக்கியமானது களி. பல்வேறு வகையான களிகளை நம் மக்கள் உண்டு வந்தார்கள். நீண்ட நேர பசியைத் தாங்குவதற்கும், உடலை உரமாக்கவும் களி சிறந்த உணவு.

இப்போதைய தலைமுறையில் பலர் களி வகைகளை வீட்டில் செய்வது கிடையாது.
ஆனால் ஆரோக்கிய வாழ்வை நாடும் மக்கள் மீண்டும் பழந்தமிழர் உணவுமுறையை மீட்டெடுக்க விரும்புகிறார்கள்.

சிறுதானிய உணவு வகைகளையும், களி வகைகளையும் பலர் பரிமாற ஆரம்பித்திருக்கிறார்கள்.

மூன்று முக்கியமான களி வகைகளை பற்றி இங்கே பார்ப்போம்:

1.கேப்பைக் களி :
ராகி களி, கேப்பைக் களி, கேழ்வரகுக் களி என வெவ்வேறு பெயரில் மக்கள் இதனை அழைக்கிறார்கள்.

செய்முறை :
முதலில் ராகியை நன்றாக அரைத்து ராகி மாவைத் தயார் செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். ராகி மாவை, கொதி நீரில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பின்னர் உருண்டை வடிவில் வார்த்து எடுத்துச் சாப்பிடலாம்.

கேப்பைக் களியைப் பொறுத்தவரையில் அதனுடன் வெல்லம், கருப்பட்டி, தேங்காய் போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம்.

பலன்கள் : கால்சியம் மிகவும் அதிகம் என்பதால், வளரும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், பெண்கள், தாய்மார்களுக்கு ஏற்ற உணவு இது.
கேழ்வரகு, பசியைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது.உடல் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டது. கோடையில் அனைவருமே காலை அல்லது மதிய உணவாக எடுத்து கொள்ளலாம்
வைட்டமின்கள், தாதுஉப்புகள் நிறைந்தது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். குடல் புண்களை ஆற்றும்.

  1. உழுத்தங்களி :

தேவையானவை: நன்கு அரைத்த உளுத்தம் பருப்பு மாவு - ஆறு கைப்பிடி கருப்பட்டி அல்லது வெல்லம் - தேவையான அளவு தேங்காய் துருவியது
நல்lலெண்ணெய் - நான்கு ஸ்பூன்
அரிசிமாவு - சிறிதளவு
ஏலக்காய் - நான்கு கிராம்
வறுத்த பாசி பருப்பு - சிறிதளவு

செய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசிமாவு, வறுத்த பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும் .பின்னர் கொதிக்க வைத்து, அதனுடன் கருப்பட்டி அல்லது வெல்லத்துடன் எண்ணெய் ஊற்றி நன்றாகக் கிண்டவும். பின்னர் உளுந்து மாவைப் போட்டு நன்றாக கிண்டவும். ஏலக்காய், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து கிளறி பரிமாறவும்.

பலன்கள் : உழுத்தங்களியில் கார்ப்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் மற்றும் தாது உப்புகள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. இடுப்பு எலும்பு வலுவாகும்.

பூப்பெய்தும் பெண்கள், கர்ப்பிணிகள், விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கு மிகவும் ஏற்றது.

உடல் எடையைக் கூட்ட விரும்புபவர்கள் வாரம் இரு முறையாவது இதைச் செய்து சாப்பிடுவது பலன் அளிக்கும்.

3.வெந்தயக்களி :

புழுங்கல் அரிசி - 300 கிராம்
உளுந்தம் பருப்பு - 50 கிராம்
வெந்தயம் - 50 கிராம்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
நாட்டுச் சர்க்கரை - 300 கிராம்

செய்முறை : புழுங்கல் அரிசியை இரவே ஊறவைத்து நன்றாக மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். உளுத்தம் பருப்புடன், வெந்தயம் சேர்த்து, தனியாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் புழுங்கல் அரிசி மாவுடன், உளுந்து மாவைக் கலக்கவும். தோசை மாவு பதத்திற்கு நன்றாகக் கலந்த பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி, கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

களி போல நன்றாகத் திரண்டு வரும்போது நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துக் கலக்க வேண்டும். பாத்திரத்தில் கிண்டும் போது நடுவே கட்டிகள் வராத அளவுக்கு கிண்ட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். பின்னர் உருண்டைகளாக உருட்டிச் சாப்பிடலாம்.

பலன்கள் : கிராமத்தில் வயதானவர்களுக்கு தரப்படும் முக்கியமான உணவு வெந்தயக்களி. இதில் அத்தனை சத்துக்களும் இருக்கிறது.

உடலை வலுவூட்டும் .உடல் குளுமை அடையும், செரிமானம் சீராகும், வயிற்றுப்புண், வாய்ப்புண் இருந்தால் குணம் ஆகும்…

ஆகவே, களி சாப்பிட்டால், உடல் நலம் பெருகும்.

அன்று நம் முன்னோர்கள் இதைத்தான் அமுதம் என்றார்கள், இதைத்தான் உண்டு உடல் வலிமையேடு இருந்துள்ளார்கள்….

படிக்கவேண்டிய கதை!புறம் பேசாதீர்காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர். ஒருநாள் அந்த நாட்டின் அரசன்Continue Reading

சிலருக்கு இரவு நேரத்தில் தூக்கம் வராது. அதற்கு அவர்களது அறையில் உள்ள விளக்கும் ஒரு காரணமாக இருக்கலாம்.கண்களுக்கு எரிச்சல் படும் வகையில் இந்த விளக்குகள் அமைந்திருந்தால் நம் தூக்கம் நிச்சயமாக பறிபோய்விடும்.பொதுவாக சிகப்பு நிறத்தில் உங்கள் விளக்கு அமைந்தால் எப்போதும் உங்கள் மனநிலை பதட்ட சூழ்நிலையோடு இருக்கும் அதனால் நம் தூக்கம் என்பது தூரமாக இருக்கிறது.அதே நேரத்தில் மஞ்சள் நிறமாக உங்கள் விளக்கு அமைந்தால் உங்கள் கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்திContinue Reading

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்: 1168 – 75 -> சுவாமி கோபுரம்1216 – 38 -> ராஜ கோபுரம்1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம்1315 – 47 -> மேற்கு ராஜா கோபுரம்1372 -> சுவாமி சந்நிதி கோபுரம்1374 -> சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம் 1452 -> ஆறு கால் மண்டபம்1526 -> 100 கால் மண்டபம்1559 -> சௌத் ராஜா கோபுரம்->Continue Reading

முருகன் – வைகாசி விசாகம் ஐயப்பன் – பங்குனி உத்திரம் ராமர் – புனர்பூசம் கிருஷ்ணன் – ரோகிணி ஆண்டாள் – ஆடிப்பூரம் அம்பிகை – ஆடிப்பூரம் சிவன் – திருவாதிரை விநாயகர் – ஆவணி விசாகம் பார்வதி – ஆடிப்பூரம் அனுமன் – மார்கழி அமாவாசை நந்தி – பங்குனி திருவாதிரை திருமால் – திருவோணம் பரதன் – பூசம் லக்குமணன் – ஆயில்யம் சத்ருகன் – மகம்Continue Reading

நாம் பேசும் பேச்சு என்பது மற்றவர்களை பண்படுத்தாவிட்டாலும் கூட புண்படுத்தாத வகையில் அமைந்து இருக்க வேண்டும். பேசும்போது கனிவான, இதமான, இனிய சொற்களை கொண்டு பேச வேண்டுُّம்.இவைகள் இல்லாமல் நம்மிடம் போனதால்தான் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகிறோம்..கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும், தர்மம் செய்த பின் செய்யும் தர்மத்தைவிட மேலானது..கொடுத்த தர்மத்தை சொல்லிக் காட்டாமல் இருப்பதே தர்மமாகும் தர்மமே செய்யாமல் கனிவான, இனிய சொற்கள் மிகப் பெரிய தர்மம் பெற்றோரிடம் பணிவாகContinue Reading

மஹா விஷ்ணுவிற்கு வாகனமாகவும் கொடியாகவும் விளங்குவது கருடன். புள்ளரையன், பக்ஷி ராஜன், நாகப் பகையோன், சுபர்ணன் என்றெல்லாம் அழைக்கப்படும் கருடன் திருவைகுந்தத்தில் எப்போதும் எம்பெருமானுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ஒரு நித்ய சூரி. எம்பெருமானை தாங்குவதில் முதன்மையானாவ்ர் எனவே வைணவ சம்பிரதாயத்தில் இவர் பெரிய திருவடி என்றழைக்கப்படுகின்றார். மனித முகத்துடன், பெரிய மீசையுடனும், கருடன் போன்ற அலகுடனும், உடல் முழுவதும் எட்டு நாகங்கள் ஆபரணமாக தரித்து , ஒரு காலைContinue Reading