தெரிந்து கொள்வோம்!

0
173

பூச்சி இனங்களில் அறிவுமிக்கது எறும்பு.

ஆச்சரியமான விஷயங்களை பார்க்கும்போது மனிதனுடைய கண்கள் 45 சதவீதம் வரை விரிவடைகின்றன.

உலகில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன.

பூமிக்கு அடியில் 2 மைல் தொலைவில் நிலக்கரி கிடைக்கும்.

நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் ரெனே டேக்கார்ட்.

ஜொங்கா, பூட்டான் மக்களின் முதல் மொழியும், தேசிய மொழியும் ஆகும்.

மூன்று வயதில் 10 கி.மீ. நீந்தி சாதனை படைத்த இந்திய சிறுமி, யாமினி.

போலாந்து நாட்டின் தலைநகர், வார்சா.

கியாட் என்பது பர்மாவின் நாணயமாகும்.

ரத்தம் உறைவதற்கு உதவுவது வைட்டமின் கே.

பெண்களால், ஆண்களைவிட வாசனையை அதிகமாக உணர முடியும்.

கோல்டன் கேட் என்ற பாலம், உலகின் மிக பிரபலமான தற்கொலை இடமாக கருதப்படுகிறது.

எறும்புகள் அதன் எடையை விட 50 மடங்கு அதிக எடையை தூக்கி சுமக்கக்கூடியவை.

கரப்பான்பூச்சியால் தலை துண்டிக்கபட்ட பின்பும் 9 நாட்கள் வரை உயிரோடு இருக்க முடியும்.

நகங்கள் இரவை விட பகலில் வேகமாக வளரும்.

ஒவ்வொரு நொடியும், அமெரிக்கர்கள் 100 பவுண்ட்களுக்கு சாக்லேட் சாப்பிடுவார்கள்.

உலகில் முதன்முதலில் குறுக்கெழுத்து புதிரை லண்டன் சன்டே எக்ஸ்பிரஸ் வெளியிட்டது.

80 சதவீதத்திற்கு மேற்பட்ட குப்பை பொருட்கள் மறுசுழற்சிக்கு பொருந்தும்.