விமான நிலையத்தை போன்று ரயில் நிலையங்களில் புதிய பாதுகாப்பு திட்டம்…..

0
119

இரயில்வேயின் புதிய பாதுகாப்புத் திட்டம் விமான நிலையங்களைப் போன்ற ரயில் பயணிகள் 20 நிமிடங்களுக்கு முன்பே இருக்க வேண்டும்…..

புது டெல்லி: ரயிலில் பயணிக்கும் பயணிகள் தங்களின் ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களில் இருந்து 20 நிமிடத்துக்கு முன்பே ரயில் நிலையத்துக்குச் செல்லும் வகையில் புதிய பாதுகாப்புத் திட்டத்தை ரயில்வே துறை உருவக்கியுள்ளது. 

இந்த திட்டம் கும்ப மேளா நடைபெறும் அலகபாத்தில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், கர்நாடக மாநிலம் ஊப்ளி உள்ளிட்ட 202 முதன்மையான ரயில் நிலையங்களில் இந்தப் பாதுகாப்பு முறையை நடைமுறைப்படுத்த ரயில்வே பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் அருண் குமார் தெரிவித்துள்ளார். 

இந்த திட்டம், ரயில் பயணியின் ரயில் பயணத்தைப் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என ரயில்வே துறை கடுமையாக ஆராய்ந்து வருகிறது. அதன்படி, முதன்மையான ரயில் நிலையங்களில் ரயில் புறப்படுவதற்கு 15 – 20 நிமிடத்துக்கு முன்பே பயணிகள் உள்ளே சென்றுவிட வேண்டும். அதன்பின் வரும் பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் இந்தப் புதிய பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 

இதற்காக அந்த ரயில் நிலையத்தைச் சுற்றிலும் மதில் கட்டப்படும். வாயில்களில் காவலுக்கு நிற்கும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பயணிகளைச் சோதனையிட்ட பின்னரே ரயில் நிலையங்களுக்குள் செல்ல அனுமதிப்பர். ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறை என அழைக்கப்படும் இந்தத் திட்டம் 385 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. அதுமட்டும் இன்றி பயணிகளை கண்காணிக்க CCTV கேமராக்களும் பொருத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

2016 ஆம் ஆண்டில் 202 ரயில் நிலையங்களில் கண்காணிப்புக் கருவிகளை வலுப்படுத்துவதற்கு இது ஒருங்கிணைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பு (ISS) கீழ் ஒரு பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். தற்போது வரை நமது நாட்டில், விமான நிலையங்களில் மட்டும் தான் இது போன்ற முறையை அமைபடுத்தி இருந்தனர். ஆனால் தற்போது, இந்த முறையை இந்தியாவில் ரயில் நிலையங்களிலும் அமல் படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here