தாய்ப்பால் அதிகமாக சுரக்க ஐடியா சொல்லுங்கள்?

பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

 1. பொன்னாங்கண்ணிக் கீரையை பச்சையாகவே மென்று சாப்பிடலாம்.
 2. கீரையாக கடைந்து சாப்பிடலாம்.
 3. வதக்கி சாப்பிடலாம்.
 4. கீரையுடன் பூண்டு மிளகு சேர்த்து சூப் செய்து சாப்பிடலாம்.
 5. கீரையை சாறு எடுத்து சாப்பிடலாம்.

பொன்னாங்கண்ணி கீரையில் கீழ்க்கண்ட தாதுப்பொருட்கள் இருக்கிறது.

 1. புரதம் – 5 %
 2. கொழுப்பு – 0.7%
 3. நார்ச்சத்து – 2.8%
 4. மாவுச்சத்து – 11.6%
 5. கால்சியம்
 6. பாஸ்பரஸ்
 7. இரும்புச்சத்து
 8. ரைபோபிளேவின்
 9. நியாசின்
 10. வைட்டமின் சி
 11. மற்றும் பல

பால் பண்ணை வைத்திருக்கும் அன்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு, நீங்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை அதிக அளவில் பயிர் செய்து, அதை பால் கறக்கும் மாடுகளுக்கு பசும் தீவனமாக கொடுங்கள். இந்த பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிட்ட பிறகு பால் கறந்தால், அந்தப் பால் சிறந்த பாலாகும். சிறந்த மருத்துவ குணம் கொண்டது. இந்தப் பாலை சாப்பிடுபவர்களுக்கு அனைத்து வியாதிகளும் குணமாகும்.

எனவே மனிதர்களுக்கும் சரி மாடுகளுக்கும் சரி பால் அதிகமாக சுரக்க பொன்னாங்கண்ணி பெரும் துணை புரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *