பனைமரம் போன்ற நட்பு கொள்

0
132

நல்ல நண்பர்களை தேர்ந்து எடுப்பது என்பது, ??????மிக மிக அவசியமானது என் இந்த நட்பு நம் வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கக் கூடியது.

திருவள்ளுவர், நட்பை பற்றி பல பாடல்களை, திருக்குறளில் பாடியுள்ளார். அவற்றில் சில என்னவென்றால்…
“முகநக நட்பது நட்பன்று., நெஞ்சத்து
அகநக நட்பதே நட்பு”
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு”
என்று நட்பை பற்றி நம் வள்ளுவர் அழகாக கூறியுள்ளார்.

நாம் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பது எப்படி ?

யாரோடு நாம் பழக ஆரம்பிக்கிறோமோ, அவனிடம் நாம் இனிமையாக பழக வேண்டும். கொஞ்ச நாட்களுக்கு அதை நட்பாக கருதக்கூடாது. , அதை வெறும் பழக்கமாகத்தான் கருத வேண்டும். நமக்கு கஷ்டம் வரும் போது ஒருவேளை அவன் கை கொடுத்தால், இல்லையென்றால், நாம் இல்லாத இடத்தில், நம்மைப்பற்றி நல்ல விதமாக அவன் பேசுவதாக நீ கேள்விப்பட்டால், நீ அவனை நண்பனாக்கிக் கொள்ளலாம். ஏனென்றால், நட்பு என்பது வெறும் முகஸ்துதி அல்ல.,

நட்பு என்பது,
பனை மரம் போன்ற நண்பர்கள்.,

இரண்டு, தென்னை மரம் போன்றவர்கள்.,

மூன்றாவது, வாழை மரம் போன்ற நண்பர்கள்.

நம்மிடம் எந்த உதவியும் எதிர்பாராமல், நமக்கு உதவுபவன் பனை மரம் போன்ற நண்பன்.

நம்மிடம் அவ்வப்போது உதவிகளை பெற்று நண்பனாக இருப்பவன், தென்னை மரத்துக்கு இணையான நண்பன்.

தினமும் நம்மிடம் உதவி பெற்றுக்கொள்பவன், வாழை மரம் போன்ற நண்பன்.

இம்மூவரில், பனை மரம் போன்ற நண்பனையே நீ தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏன் பனை மரம் போன்ற நண்பர்கள்தான் தேவை என்றால், பனை மரம் யாராலும், நட்டு வைக்கப்பட்டது அல்ல., பனம் பழத்தை யாரும் தேடி புதைத்ததில்லை., அது தானாகவே முளைக்கிறது., அது தனக்கு கிடைத்த தண்ணீரை தானாகவே எடுத்து வளர்கிறது. தனது உடம்பு, மற்றும் ஓலைகளை, உலகுக்கு தருகிறது. நம்மிடம் எந்த உதவியையும் எதிர்பாராமல், நமக்கு உதவுபவனே உண்மையான நண்பன். எனவே தான், பனை மரம் போன்றவனை நண்பனாக்கிக்கொள்

ஆனால் வாழை மரமோ, நாம் தினமும் தண்ணீர் ஊற்றினால்தான் அது நமக்கு பலன் தரும். அது போல வாழை மரம் போன்ற நண்பர்களுக்கு, தினமும் ஏதாவது நாம் கொடுத்தால்தான், அவர்கள் நமக்கு நண்பர்களாக இருக்க விரும்புவர்.

தென்னை மரமோ, அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்த்தால்தான், அது நமக்கு பலன் தருகிறது. அது போல, இவ்வகையினருக்கு, அடிக்கடி பணம் கொடுத்தால்தான், அவர்கள் நமக்கு நண்பர்களாக இருப்பார்கள்.

எனவே, நாம் எந்த வகை நண்பர்களை கொண்டிருக்கிறோம் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். ஏனென்றால், நல்ல நட்புக்கு என்னென்ன இலக்கணம் உண்டோ, அவையெல்லாம் கூடி வாய்க்கப்பெற்ற ஒருவன், நமக்கு நண்பனாகும் போது மட்டும்தான், நம் வாழ்க்கை செழிக்கும். பின் அவன் நமக்கு சகோதரனாகவும் மாறி விடுவான்.
நல்ல நண்பர்கள் மட்டும் நமக்கு இல்லை என்றால், நம் வாழ்க்கை பாதை, தவறான வாழ்க்கை பாதையாக மாறி விடும். எனவே, நல்லவனை நண்பனாக்கிக்கொள்! அப்போது நீயும் போற்றப்படுவாய்., நாடும் போற்றப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here