தலைமுடிக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் தரும் கிர்ணிப்பழம்….!

0
138

உடலின் நீர்ச்சத்து இழக்கப் படுகிறபோது, கூடவே சோடியம், பொட்டாசியம் சத்துக்களையும் சேர்ந்தே இழக்கிறோம். அதை ஈடுகட்ட பழ ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். தர்பூசணி, கிர்ணி, திராட்சை, இளநீர் போன்றவற்றில் சோடியம், பொட்டாசியம், தண்ணீர் என மூன்றுமே  இருப்பதால் அவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம்.சிலருக்கு முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டி. முகம் டல்லடிக்கும், அவர்கள் கிர்ணிப்பழத் துண்டு ஒன்றைக் கைகளால் மசித்து, முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். பசியின்மை, எடை குறைவு, மலச்சிக்கல், சிறுநீர் பாதைக் கோளாறு, அமிலத் தன்மை, அல்சர் ஆகிய அனைத்துக்கும் நல்லது. பசியின்மையை  சரி செய்து, களைப்பை நீக்கி, வாதத்தையும் பித்தத்தையும் குறைக்கும். வேறு எந்தப் பழமும் இதைப் போல வேகமாக உடல் சூட்டைத்  தணிப்பதில்லை. தலைமுதல் பாதம் வரை அழகைப் பாதுகாக்கும் அற்புத சக்தி கிர்ணிப்பழத்திற்கு உண்டு. இந்த பழத்தில், புரதமும், கொழுப்புச்சத்தும் அதிகம்  இருப்பதால் கேசத்துக்கு உறுதியையும், சருமத்துக்குப் பொலிவையும் அள்ளித் தருவதில் வள்ளலாக இருக்கிறது.  உடல் சூட்டினால் கண் எரிச்சல், கண் நோய் ஏற்படலாம். இதற்கு தினமும் இரண்டு கிர்ணிப்பழ துண்டுகளை சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள். கண்கள் பிரகாசிக்கும். ஒரு கப் கிர்ணி பழத்தில் உள்ள கலோரி 54.6 வைட்டமின் ஏ மற்றும் சி, பொட்டாசியம் மூன்றும் இதில் அதிகமுண்டு. தோலில் வீக்கம் ஏற்பட்டு விகாரமாகத் தோன்றும், இதற்கு கிர்ணிப்பழ ஜுஸ், வெள்ளரி ஜுஸ் இரண்டையும், சமஅளவு கலந்து தடவினால்  வீக்கம் குறைந்து தோல் மிருதுவாகும். கிர்ணிப்பழ விழுதுடன் உப்பு, இஞ்சிச்சாறு, சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல், எரிச்சல், குடல் நோய் குணமாகும். கிர்ணி விதை பவுடரை தேனில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here