வெந்தயக்கீரை இஞ்சி ரொட்டி!!

கீரையின் நன்மைகளைச் சொன்னால் தான் தெரியும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் அனைவருக்குமே கீரை மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது தெரியும். அந்த வகையில் வெந்தயக்கீரை இன்னும் சிறப்பான ஒரு உணவுப் பொருள். இப்போது வெந்தயக்கீரை இஞ்சி ரொட்டி எளிதாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் :

வெந்தயக்கீரை – 2 கட்டு (பொடியாக நறுக்கியது)

கோதுமை ரவை – 2 கப்

அரிசி மாவு – 1 கப்

பொட்டுக்கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூ ன்

வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் பேஸ்ட் – 1 டீஸ்பூன்

இஞ்சி – 1 துண்டு (பொடியாக நறுக்கியது)ஹ

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

👉 முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவை, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, இஞ்சி நறுக்கியது, வெந்தயக்கீரை, பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

👉 பின்னர் அதனை சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும். அதே சமயம் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து காய வைக்க வேண்டும்.

👉 பின்பு ஒரு மென்மையான துணியை நீரில் நனைத்து, நன்கு பிழிந்து, பின் அதில் ஒவ்வொரு உருண்டைகளையும் வைத்து ரொட்டி போன்று கையால் தட்டி, சு டாக உள்ள தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்க வேண்டும்.

👉 மீதியாக உள்ள மாவையும் ரொட்டிகளாக சுட்டு எடுத்தால், சுவையான வெந்தயக்கீரை இஞ்சி ரொட்டி தயார்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *